Sunday, 21 June 2015

"க்குகூம்... எல்லா வெங்காயத்திலும் தான் 
பூச்சீ... வண்டூ உழுது" 

இன்று 21.6.15 PTTV உரக்க சொல்லுங்கள்  நிகழ்ச்சி ...
மருத்துவர் கவுசல்யா, சித்த மருத்துவர் அருண், சமூக ஆர்வலர் முனைவர் சுந்தரவள்ளி, ஏற்றுமதியாளர் பாலாஜி ... இவர்களுடன் நெறியாளர் கார்த்திகேயன்...

பாக்கெட் உணவு உடலுக்கு தீங்கா? பாரம்பரிய உணவு  வெறுப்பது ஏன்? 

நடுவரில் 3 பேர் பாக்கெட் உணவை ஏற்காதவர்களாக பேசினர். ஏற்றுமதி யாளரும், ஒரு சிலருமே பாக்கெட் உணவை ஆதரித்தனர். அதிலும் கூட  சுரம் குறைந்தே இருந்தது.

பாரம்பரிய உணவுக்கு ஆதரவு பெருகியது ஆறுதல்.  ஆனாலும் அளவோடு சேர்க்கப்படும் ரசாயன பொருளால் உடலுக்கு பாதிப்பு இல்லை என்ற விவாதத்தை,  நியாயப்படுத்த ஊசி கூட ரசாயனம் தான் அதை மட்டும் பயன்படுத்தலாமா? என்று வாதம் செய்தது பரிதாபமாக இருந்தது.

ஊசி என்பது மருந்து, அது உணவல்லவே! மருந்தே உணவானால் வாழ்க்கை மறந்து போக வேண்டியதுதான் என்பதை அழகாக விவாதித்து அருமை!

அதுமட்டுமல்ல... ரசாயன  மருந்தை கையாளும் மருத்துவர் கவுசல்யா பாக்கெட் உணவை நஞ்சென்றது தான் "நச்!"

அதுபோல அரசுக்குத்தான் எல்லா பொறுப்பும் இருக்கிறது; பாமரனாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், உயிர் விலைமதிப்பற்றது தானேஎன முனைவர் சுந்தவள்ளி கூறியது அர்த்தம் உள்ளது. ஆகவே அரசுக்குத்தான் அனைத்து பொறுப்பும் உள்ளது என்றது சூப்பர்!

மொத்தத்தில் இன்றைய இந்த விவாதம் பயனுள்ளது. 

ஒரு கொசுரு... கெமிக்கல் கலப்பதால்தான், அந்த காலம் மாதிரி அரிசி, பருப்பு, மாவு போன்றவற்றில் பூச்சி, வண்டு விழாமல் மாத கணக்கில் பொருள்கள் இருக்கிறது என்று விற்பனையாளர் பாலாஜி கூறியபோது... சமையல் அறையில் இருந்த என் மனைவி, "க்குகூம்... எல்லா வெங்காயத்திலும்தான் பூச்சீ... வண்டூ உழுது" என்றது என் காதில் வண்டாக வந்து குடைந்தது!

அப்படியென்றால்... கெமிக்கல் இன்னும் அதிகமாக போடனுமோ...
விற்பனையாளர் பாலாஜி பாஷையில்...!

No comments:

Post a Comment