மாணவர்களுக்கு எதுக்கு அரசியல்...?
இன்று 14.6.15 புதிய தலைமுறை டிவியில் இரவு 9 மணிக்கு 'உரக்கச் சொல்லுங்கள்' நிகழ்ச்சி ... நெறியாளர் கார்த்திகேயன்... நடுவர்கள் மாணவர் இணையம் பிரிட்டோ...இளம் பேரா ஒருவர், மூத்த பேரா ரங்கராசன், ஏதோ ஒரு நிபுணர் அனந்தகுமார்...
மாணவர்களுக்கு எதுக்கு அரசியல்...?
2 பக்கமும் விவாதம் காரசாரமாகவே போனது! 18 வயதில் ஓட்டுரிமை கொடுத்துவிட்டு மாணவனுக்கு, இளைஞனுக்கு அரசியல் எதுக்கு என்றால் என்ன அர்த்தம் என நன்றாகவே துவங்கி, உணர்ச்சி பிழம்பாகிவிட்டனர் மாணவர்கள்!
அரசியல் வேண்டாம் படிப்புத்தான் வேண்டுமென்று என்று வாதிட்ட பக்கம் வலுவில்லை; ஒப்புக்கு புளித்துப்போன வாததத்தை வைத்தனர்! ஆனால் நடுவரில் வந்த பெரியவர்கள் சதுரியமாக பேசினர்! அதிலே கொடுமை என்னவென்றால் பெரியவர் பேரா அவரின் உளுத்த வாதத்திற்கு சுபாஷ் சந்திரபோசையும், பகத்சிங்கையும் துணைக்கு அழைத்துதான் பரிதாபமாக இருந்தது!
அரசியல் வேண்டாமென்று சொல்லவில்லையாம்.... படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு போறதாம்!
கல்வி நிறுவனங்களுக்குள் அரசியல் வேண்டாமாம்! காவி அரசியலை கல்வியில் புகுத்திக்கொண்டு, கல்வி நிலையங்கள்தோறும் கோவில் மாடங்கள் ஆக்கிக் கொண்டு, பேசறாங்க.... பேசு..!
சாதி,மத,சமயத்தை வைத்து ஊதி ஊதி பெருச்சாக்கி, அரசியலாக்கி ஆட்சியை பிடித்து விட்டு , இப்ப அரசியல் வேண்டாமாம்!
பிரச்சனையே 'ஜெய ஜெய சங்கர' ன்னு பஜனை பாடிகிட்டு இருந்தால் பிரச்சனை இல்லை; பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படித்தது, படிக்கிறதுதான்!
ஆனால் அரசியல் வேண்டுமென்று மாணவர்கள் வெளுத்து வாங்கு வாங்குன்னு வாங்கினார்கள்; அதற்கும்...
அதற்காக அவகாசம் கொடுத்த நெறியாளருக்கும் நன்றி!
No comments:
Post a Comment