Tuesday, 23 June 2015

மோடியும், லேடியும்..! 
இன்று 22.6.15 PTTV மக்கள் மேடையில்... 

நெறியாளர் படாதபாடு பட்டார் யோகா அரசியல் இல்லை, அரசின் ஆக்கப்பூர்வமான பணியென்று! அவருக்கும் எஸ்வி.சேகருக்கும் கோவையில் இருந்து பேசிய நேயர் வைத்தார் ஒரு ஆப்பு..! அப்படியே வாயடைத்துப் போனார்கள்! 

ஆர்எஸ்எஸ் சின் பிதாமகன் என்று பரப்பப்படும் ஹெட்கேவர் நினைவு நாளில் யோகா உலக தினமாக்க மோடி அரசுதான் ஐநா விடம் "தலைகீழ் நின்று" செய்த 'யோகா' வினால்தான் இந்த கூத்து நடந்தது என்று மோடியின் மோசடியை அம்பலப்படுத்தினார்! அவருக்கு நன்றி! 


ஆர்கேநகர் ஜெயலலிதா பிரச்சாரம்..!
தான் ஒரு வேட்பாளர் என்கிற முறையில் அர்த்தமானதே! ஆனால் அங்கே தலைவிரித்தாடும் அராஜகம், ஆக்கிரமிப்பு, அதிமுகவின் பணநாயகம், அரசே மொத்தமாக அங்கு முகாமிட்டு (அமைச்சர்கள், அதிகாரிகள்) அழிச்சாட்டியம் செய்வது அர்த்தமற்றது மட்டுமல்ல;  கண்டிக்கத்தக்கது! 

தேர்தல் கமிஷன் இல்லாமல் போனதுதான் கொடுமையானது! 

22.5.15 PTTV நேர்பட பேசு...க்கு!

ஆர்கேநகருக்கு..!

வேலூரில் இருந்து மட்டும் 25,000 (5,000 மாணவர் உள்ளிட்டு) பேர்கள் போய் உள்ளார்களாம்! 100 பிரியாணி மாஸ்டர்களாம்..! அப்படி என்றால் தமிழகம் முழுவதும் இருந்து எவ்வளவு பேர் சென்றிருப்பார்கள்? 

(சேலம் மாநகரில் இருந்து சென்ற ஒருவர் கூட, அங்கே "அரசியல்" பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவ
மனையில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்துவிட்டார்!)

நன்றி: காலைக்கதிர் 23.05.15 சேலம்.

No comments:

Post a Comment