Sunday, 21 June 2015

ஜென்ராம் சூப்பர்! நெத்தியடி!

இன்று 22.6.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அதிமுக பாரதி, பாமக பாலு, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்!

யோகா பற்றி அதிமுக 'மவுன யோகா' ஏன் என்ற விவாதம்... அதற்கு அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில்  பங்கேற்றனரே என அதிமுக பாரதி சொல்ல, அதற்கு அமைச்சர்கள் விதவிதமான யோகாவை தினம், தினம் பார்த்துதான் வருகிறோம் என நெறியாளர் ஜென்ராம் கூறியது சூப்பர்! நெத்தியடி!

பாரதி பதில்தான் பரிதாபம்... இன்றைக்கு ஆர்கேநகர் தேர்தலுக்கு போக இருப்பதால், யோகா பற்றி கருத்து சொல்ல நேரம் இல்லையாம்! அய்யா எப்படி அய்யா இப்படி பதில்..!? அதைவிட சமாளிப்பு பாலு கேட்டதற்கு பதில் சொல்ல முடியாத பாரதி ஒரு போடு போட்டாரு பாருங்க...'அன்புமணியை முதல் அமைச்சராக அறிவிக்கனும் அதிமுக ன்னு எதிர்ப்பார்க்கிறீங்க; அது நடக்குமா?'  எப்படியய்யா இப்படியெல்லா பதிலு..!?

பாலுகிட்ட அதி மேலாவிதனம் அவ்வப்போது தலைதூக்கியது... 'காலை நேரம் பயனுள்ள அறிவுபூர்வமான விவாதமாக இருக்கனுமாம்!' அய்யா பாலு அவர்களே...தங்களின் ஜாதிய ரீதியான திரட்டல் மிக அறிவு பூர்வமானதோ? பதில் பொறுமையாக சொல்லுங்கய்யா முதல்வர் வேட்பாளர் மருத்துவர் சின்ன அய்யாக்கிட்ட கேட்டு! சொல்லுவிங்களா? அடுத்து விவாதத்திற்கு வரும்போது! அல்லது தினம் தினம் வரும் அறிக்கையில் சொன்னாலும்கூட போதும்!

இந்த யோகாவை பற்றி ஊடகங்கள் ஏன் இந்த ஊது ஊதுகின்றன என்பதன் அர்த்தம் என்ன? பிரதமர் எதற்கு உலகத்திற்கு நன்றி  கூறினார்? அதற்கு என்ன அர்த்தம்? ஊடகங்கள் அலசுமா? 

எல்லாம் இந்துத்துவா மயமய்யா மயம்! கிடைப்பதெல்லாம் தனக்கு ஆயுதமாக்கும் ஆர்எஸ்எஸ் அரசியல் உத்தி; அதன் அதிதீவிர தொண்டன்தான் ஆர்எஸ்எஸ் மோதி!

No comments:

Post a Comment