Wednesday, 24 June 2015

நாய் வாலைக்கூட நிமிர்த்தலாம்..!

இன்று 24.6.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி காலை 9.30க்கு அதன் சுருக்கம் தான் பார்க்க நேர்ந்தது. ஆனால் சுரீர் என்றிருந்தது! ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு உரைக்குமா? என்று தெரியவில்லை!

நெறியாளர் ஜென்ராம் க்கு மிகுந்த பாராட்டைத் தெரிவிக்கலாம்!
எல்லாம் யோகாதான்! நெறியாளரின் கேள்வி ஆழமிக்கது! 

யோகாவின் பிதாமகன்களின் அச்சு அசலைத்தான் பாஜக வும், மத்திய அரசும் செய்கிறதா? இந்து மத(ன)ம் சார்ந்த அரசியல் இதில் இல்லவே இல்லையா? (இதை இந்த நேரத்தில் அதிமுக, தமிழக அரசுக்கு கையில் எடுக்காததால், அது சுத்த சுயப்பிரகாசம் என்று அர்த்தமில்லை என்ற அர்த்தத்தில் நெறியாளர் சொன்னதும் ஹலைட்!

'டாஸ்மாக் கில் பாஸ்மார்க்! ஆனால் உடல்நலம் சார்ந்ததில் பெயில் மார்க்' என தமிழிசை கூறியதை 'மனமா? மதுவா?' (அல்லது மதமா? மதுவா?) என்றால் மது மேலானதே! என்று கூறி விட்டால் என்ன செய்வார் என எதிர் கேள்வி போட்டு நெறியாளர் விவாதத்தை முடித்தது சூப்பர்! நான் இதை எதிர்ப்பாகவே இல்லை!

யோகா மீதான மோடியின் மோகம் அரசியல் சார்ந்தது; மதம் சார்ந்தது; மனம் சார்ந்தது அல்ல! என்பதை மிக அருமையாக இன்றைய நிகழ்சசி அமைந்தது அர்த்தமும், அழுத்தமும் மிக்கதே என்றால் மிகையல்ல! புதிய தலைமுறை டிவிக்கும், நெறியாளர் ஜென்ராம் க்கும் நன்றி உரித்தாகட்டும்!

நிகழ்ச்சியில் மாத்ருபூதம் (பாஜக ஆதரவு) 'எல்லாம் மேல இருக்கிறவன் (மோடி) பாத்துக்குவான்!' என்றே எல்லாவற்றிக்கும் பதில் கூறினார்! 

அதற்கு ஹாஜாகனி 'மேல இருக்கிறவனே சரி இல்ல; அந்த காலத்திலேயே நாங்க பிளாஸ்டிக் சர்ஜன்' பண்ணவங்க' என்று விஞ்ஞானிகள் மாநாட்டிலேயே... அதாவது திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தவர் மோடி என்று பெரும் போடு போட்டார்! 

ஆனாலும் 'அம்மா'க்கு வக்காலத்து போட்டதுதான் எதற்கோ அச்சாரம் போடுவதுபோல் இருந்தது! நாய் வாலைக்கூட நிமிர்த்தலாம்; ஆனால் அம்மாவை திருத்தவோ, நம்பவோ முடியாது கனி அவர்களே! ஜாக்கிரதை!

No comments:

Post a Comment