அட! யோகா சிகாமணிகளே!
இப்ப யோகா இல்லையென்று எவன் அழுதான்? யோகா வேண்டுமென்றால் அவனவன் பண்ணிக்கிறான்! அரசாங்கத்துக்கு யோகா பண்றதுதான் வேலையா?
ஒழுங்கா ஊட்டசத்து உணவு கொடுத்தாலே போதும்! உயிர் காக்கும் அரசு மருத்துவமனையில் இலவச தரமான மருத்துவம் கொடுத்தாலே போதும்! ரத்தசோகையில் நாளும் மடியும் பெண்களுக்கு உரிய மருத்துவம் இருந்தாலே போதும்!
இதையெல்லாம் விட்டுவிட்டு வேர்த்து விறுவிறுத்து தேசிய கொடியில மூஞ்ச தொடச்சிக்கிட்டு யாரு வரச் சொன்னா மோடிய?
ஓ..! இதெல்லாம் ஓட்டு அரசியல் இல்லீங்களோ?
இங்கிருந்து அமெரிக்காவுக்கு போய் யோகா பண்ணுனுமா? அப்பிடியே லன்டனுக்கும், போர்ச்சுக்கல்லுக்கும் போய் அந்த லலித்மோடி குடும்பத்தோட யோகா பண்ணுனா அந்த அம்மாவுக்கும் ஆஸ்பத்திரியில வேல இல்ல பாருங்க! அப்படியே டிச்ஜார்ஜ் பண்ணி குடும்பத்தோட இங்க நைசா கூட்டிக்கிட்டு வரலாமில்ல!
யோகா இல்லீன்னு இந்தியாவுல தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கனாங்களா? மருந்து குடிச்சி செத்தாங்களா?
கெடக்கிறது கெடக்கட்டும் கெலவிய தூக்கி மடிமேல வைய்யிங்கிற கதையா... கறுப்பு பணம் என்னாச்சி? நெலத்தெல்லாம் புடுங்கிறாங்களே... யாருக்கு கொடுக்க புடுங்கிறீங்க? இலங்கை தமிழர்களுக்கா? இல்ல இந்தியாவுல நெலமில்லாத இருக்கும் உனக்கும், எனக்குமா? இதெல்லாம் ஓட்டுக்கா? இல்ல ஓட்டுக்குத் தரும் நோட்டுக்கா?
ஆய் ஊய் ன்னா சீனாவ வம்புக்கு இழுக்கிறதே வேல வெங்காயமா போச்சி! சீனாவுல இருக்கிறவ கேட்கிறத இங்க இருக்கிறவ எதுக்கு கேட்கிறது! இங்க இருக்கிறவ வேல இல்லாம, சோத்துக்கு இல்லாம கெடக்கிறாங்... அத பாருன்னா, சீனாவ பாக்கிறதாம். இப்ப ஒருத்தன் இந்தியாவுல சும்மா 27 கோடிக்குத்தான் ஒரு காரு வாங்கி இருக்கானாம்! நீங்க எத்தன கோடிக்கையா காரு வாங்கியிருக்கிறீங்க?
சீனாகாரனையும், ஜப்பான்காரனையும் பார்த்து என்னா செய்யறது. எல்லா நாட்டுல இருக்கிற கொள்ளக்காரன்கள் எல்லாம் சேர்ந்து மோடியிங்கிற குதர மேல பணத்தக்கட்டி, நம் நாட்டு சொத்தெல்லாம் நாக்க போட்டு நக்காத கொடுமையா, அள்ளிக்கிட்டு போறாங்க; அத மறைக்கத்தான் மாட்ட வெட்டாத, சோத்தப்பத்தி கவலபடாத யோகா பண்ணு அது இது உடாண்ஸ் உட்டுகிட்டு திரியறது ஆர்எஸ்எஸ் கும்பல்!
அத்வானியே சொல்லிட்டாரு, மோடி எமெர்ஜன்சிய கொண்டார போறாருன்னு! அவுரு சீனாக்காரங் பேசக் கேட்டுக்கிட்டா சொன்னாரு? நெதானமா யோசிங்க! கம்யூனிஸ்ட்காரன் சொல்லறத எல்லாம் கண்ண மூடிக்கிட்டு எதுக்காதீங்க! சரிங்களா?
No comments:
Post a Comment