"நாதனின் வாததத்தில் 'இடதுநாதம்' இல்லையே!"
நான் இது வரை வந்துள்ள கருத்துக்களை (ஆங்கிலம் தவிர்த்து) இப்பொழுது தான் படித்தேன்.
நாதனின் நாதத்திற்கு லைக் போட்டு விட்டு தான் மேலே எனது கருத்தை பதிந்தேன்!
'தலையை' பார்த்து இனி லைக் போடமாட்டேன்!
ஒரு விவாதம் என்கிற ரீதியில் சரி!
ஆனால் விவாதத்திற்கு யார்... யாருடைய கருத்து காரணம்... அவரின் அறிவுசார் பின்னணி என்னபதே அவசியம்; முக்கியம்!
ஒரு வலதுசாரி மனோபாவம் உள்ளவர் இதை கிளப்பி இருந்தால்.... எந்தவித கேட்டுக்கேள்வியும் கிடையாது. ஆனால், ஒரு இடதுசாரி சிந்தனைக்கு சொந்தக்காரர்கள் இப்படிப்பட்ட பதிவு வருகிறபோதுதான் வினா எழுகிறது!
நாதன் அவர்கள் இடையிடையே பதிவிடுகிறார்... "நக்கலில்லை; நன்றாக படியுங்கள்" என்கிறார்! 'ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில்தான் படிக்க வேண்டுமென்பவர்கள், அரசு பேருந்து ஊழியர்கள் அரசு பேருந்துகளில்தான் பயணிக்க வேண்டுமென்பார்களோ? '
இதில் இருந்து அவர் சொல்லுவதுபோல் நிதானமாக யோசித்தால்... அவரும் தனியார் பள்ளியில் சேர்க்கலாம்; இவரும் தனியார் பேருந்தில் பயணிக்கலாம்! அதாவது அதுவும், இதுவும் இருக்கட்டும்! எது வேண்டுமோ எடுத்துக்கிட்டும்! அப்படித்தானே!
அதாவது எலியும் இருக்கட்டும்; பூனையும் இருக்கட்டும்!
அப்படி என்றால் பூனையிடம் இருந்து எலியைக் காப்பதெப்படி? இதுதான் அடிப்படை வினா?
அதை விடுத்து... "அடிப்படை வசதியில்லை; அதுஇல்லை; இது இல்லை; டாக்டர் குடும்பம் அங்கு போகுமா? இங்குபோகுமா? " இதெல்லாம் திசை திருப்பல்!
நாதன் அவர்களின் வாதத்தில் அடிப்படையில் இடதுநாதமில்லை! அவ்வளவே! அருள்கூர்ந்து நாதனின் நாதத்தில் ஏற்பட்ட சிறு நாதப்பிறழ்வை சரிசெய்துக் கொள்ளலாமே என்பதே என் வாதம்!
இன்று 14.6.15 வலை தளத்தில் தோழர் நாறும்பூ நாதன் அவர்களுக்கு பதிவிட்டது..!
தோழர் நாறும்பூ நாதனின் 'வலைதளம்' விவாத்திற்கு ...!
ReplyDelete