"சூராதி சூரி"யை எதிர்ப்பது வீரம் அல்லவா?
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியும் போடாமல், போட்டி போடுபவர்களுக்கு (யாருக்கோ) ஆதரவும் தராமல், 'ஜனநாயக ' கடமையாற்றும் கட்சிகளை பற்றி காலைக்கதிருக்கு கவலை இல்லை!
ஆனால்... காலைக்கதிர் பார்வையில், எதிர்த்து நிற்பவர்களை நிலை குலைய வைத்து, கொன்றோ அல்லது கை கால்களை உடைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்ப போகும் "சூராதி சூரி"யை எதிர்ப்பதை வீரம் அல்லவா?
வீரம் என்று சொல்லாவிட்டாலும் நாசமாக போகட்டும்! ஆனால் இந்த வக்கிரத்தால் காலைக்கதிர் காணும் இன்பம் தான் என்ன? இன்றைய 24.6.15 அதன் வக்கிரத்தை பாரீர்!
ஒரு மூலையில் 'துக்குலியூன்டு!'
இன்றைய 24.6.15 காலைக்கதிர் கார்டூன் போலவே இன்றைய தினமணியிலும் ஒரு வக்கிரம்! ஆம்! ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்னாடக அரசு நேற்று உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த செய்தி தான் ஏறக்குறைய இன்றைய செய்தி தாள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. ஆனால் நடுநிலை நாளிதழ் என தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் தினமணி (என்றுமே ஆளும் கட்சியை ஆதரிக்கும் தினத்தந்தி கூட தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருக்கிறது) 9ஆம் (ஜெ வுக்கு பிடித்த நெம்பரோ) பக்கத்தில் ஒரு மூலையில் போட்டிருக்கிறது 'துக்குலியூன்டு!'
அதுசரி! அதையாவது போட்டதேன்னு சந்தோசப் படுங்க அப்பிடீங்கிறீங்களா? அதுவும் சரிதான்!
No comments:
Post a Comment