Tuesday, 16 June 2015

"மேக் இந்தியாவா? "கேக்"இந்தியாவா? "

"இது ஒரு பிரச்சனையே இல்ல; இதுக்கு போய்... இந்த குதி குதிக்கிறாங்க; மனைவியை காப்பாத்தப்போனது தப்பா? இவங்க ஆன்ட்ரசனை (போபால் விஷவாயு கம்பெனி முதலாளியை காங்கிரஸ் ஆட்சியில் தப்பி ஓட விட்டது)  ஓட விட்டது சரியா?" என்று லலித்மோடி விவகாரத்தில் பிஜேபி கம்பெனி பேசுகிறது!

டிவி க்களில் நேற்று கலைஞர் டிவியில் சிதம்பரம், புதிய தலைமுறை டிவி யில் நித்தியானந்தன் ஆகியோர் பேச்சை கேட்க நேர்ந்தது.

இன்று 17.6.15 தினமணி தலையங்கத்தில், "என்றோ நடந்த ஒன்றை இப்ப ஊதி ஊதி பெரிதாக்கு கிறார்கள்; அதற்கு சில ஊடகங்களும் துணை போகிறது... ஆனாலும் லலித் மோடியை கைது செய்து கொண்டு வரணும்" பேசுகிறது.

ஒன்று தெளிவு...! லலித்மோடி குற்றவாளி;

"பல நூறு கோடி ரூபாய் கறுப்பு பணம் வைத்திருக்கிற... கிரிக்கெட் விளையாட்டை சூதாட்டம் ஆக்கியவர்களில் முதல் புள்ளி (தினமணி ஒப்புதல் தந்திருக்கிறது) லலித்மோடி... "

இப்படி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளில் ஆதாரம் இருக்கிறதென்று சொன்னவரே இன்றைய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுராஜ்! அன்று.

இவர் தான் அவர்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க காரணமாக இருந்திருக்கிறார் ஒரு வருடத்திற்கு முன்பு; வெளிப்படையாக அல்ல, ரகசியமாக! இதற்கு உடந்தை ராஜஸ்தான் முதல்வர் மகாராணி சிந்தியா!

இவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள்! இவர்கள்தான் பேசுகிறார்கள்...

ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி, தூய்மை இந்தியா,  மேக் இந்தியா என்றெல்லாம்...!

அதாவது இவர்கள் மேக் இந்தியா என்பது.. இந்தியா இதுவரை இல்லாதது போலவும், இனிதான் உருவாக்க போவது போலவும் ஓலம் இடுகிறார்கள்!

ஆனால் இவர்கள் சொல்லுவது ... "மேக் இந்தியாவா? "கேக்"இந்தியாவா? "

ஆம்! இந்தியாவை "கேக்" ஆக்கி அந்நிய, இந்திய லலித் மோடி களுக்கு படையல் வைப்பதே நரேந்திர மோடியின் நரித்தந்திரம் என்றால் அது மிகையாகுமா?

திருடனை கொட்டிய அப்பட்டமான முதல் தேள் லலித் மோடி!  தேள்கடி வாங்கிய லேடி சுஷ்மா என்கிற லேடி! இவர்களின் படைத்தளபதி நரேந்திர மோடி!

No comments:

Post a Comment