அரசு பேருந்தில்
எம்எல்ஏ பயணம்!
உள்ளூரில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஆகிவிட்டாளே அவர்களின் அட்டகாசத்தை, அழிச்சாட்டியத்தை தாங்க முடியாது!
அப்புறம் பஞ்சாய்த்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் ஆகிய விட்டால் கேட்கவே வேண்டியதில்லை!
அதையும் தாண்டி எம்எல்ஏ., எம்பி., ஆகிவிட்டால் மக்கள் பாடு திண்டாட்டம்தான்! இவர்களின் தரினத்திற்காக மக்கள் அவர்களது வீடுகளில் தவம் கிடப்பதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்!
அமைச்சர், முதல் அமைச்சர் தரிசனமெல்லாம் இன்றும் கனவில்தான்; தேர்தல் நடக்கும் 'அந்த ஒரு மாதம்' தவிர!
தற்போது ஆர்கேநகர் இடைத்தேர்தலே இதற்கு சாட்சி! அங்கே ஆளும் கட்சி துறைமார்களின் ஓட்டு வேட்டைகளும், அடக்கமான ஆர்ப்பாட்டமற்ற பிரச்சாரத்திற்கு சொந்தக்காரர்களுமான கம்யூனிஸ்ட்களும் பார்த்தாலே தெரியும்!
அப்படியொரு அபூர்வ நிகழ்ச்சி இன்று 15.6.15 சேலத்தில் நடந்தது! இன்று மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாக சேலம் வரும்போது, இன்டர்சிட்டி ரயில்; போகும்போது அரசு பேருந்து!
பல சமயங்களில் நடத்துனர்கள் இவர் எம்எல்ஏ என்றால், நம்ப மாட்டார்கள்! "தமாஷ் பண்ணாதீங்க சார்; எம்எல்ஏ வாது பஸ்ல வரதாவது!" என்பார்!
அதற்கு அவர் சொல்லுவார், " இல்லிங்கோ... நா திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ தங்கவேல்ங்கோ!" என்று சொல்லி, 'பாஸ்' எடுத்துக் காட்டிய பிறகு 'அரையும், குறையுமாக' நம்பி, ஓட்டுனரிடம் சிலாகித்துவிட்டு, அப்புறம் ஒத்துக்கொள்வதை நான் பலமுறை சேலம் பஸ்நிலையத்தில் பார்த்திருக்கிறேன்!
அப்படித்தான் இன்றும் நடந்தது! சத்தியம் பண்ணாத குறையாக நடத்துனரிடம் சொல்லி, பஸ் ஏற்றிவிட்டு வந்துள்ளார் தோழர் என்.பிரவீன்குமார்!
தற்போது திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.தங்கவேல் அரசு பேருந்தில் திருப்பூரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறார்! உடன் தோழர் விகே.வெங்கடாசலம் சங்ககிரி வரை!
அதிசயம்! ஆனால் உண்மை! எளிமையின் வாரிசுகள் கம்யூனிஸ்ட்கள்!
No comments:
Post a Comment